#myguru

பெண்களும், ஆண்களும் கூடிய ஒரு கூட்டுச் சமுதாயமே உலகம், பெண் இன்றி ஆண் இல்லை; ஆண் இன்றிப் பெண் இல்லை, பெண் இல்லாமல் தனியே ஓர் ஆணோ, ஆண் இல்லாமல் தனியே ஒரு பெண்ணோ வாழ்வில் இனிமை பெறவோ, முழுமை பெறவோ முடியாது. இவ்வாறு மனித இன வாழ்வில் ஆண்-பெண் உறவு மிகவும் மதிப்புடையதாக இருக்கிறது. எனினும், ஆண்களைவிடப் பெண்கள் மதிப்பில் குறைந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்; அரசியல், மதம், பொருளாதாரம் என்ற துறைகளில் ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள்.

எந்த ஓர் ஆணும் பெண் துணையின்றி வாழ்ந்தது கிடையாது. பெற்ற தாயாக சகோதரியாக, மனைவியாக ஒரு பெண் இருக்கிறாள் உலக சமுதாயத்தில் பிறந்த அனைவரும் பெண்களால் பெறப்பட்ட பிள்ளைகள்தான் என்பதை உணர்ந்தாலே போதும்.

          "பெண் வயிற்றிலுருவாகி  பெண் பாலுண்டே வளர்ந்தாய் 

           பெண் துணையால் வாழ்கின்றாய்;  பெண்ணின் பெருமை உணர்"

பிரபஞ்சப் பரிணாம நியதிகளில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் உள்ள வித்தியாசத்தை, முக்கியமாகப் பெண்களுக்கு இயற்கையில் அமைந்துள்ள பெருமதிப்பை உணர்வோம். இறையாற்றலினால்தான் உலகமும், மற்ற அண்டங்களும், உயிர்களும் தோன்றி இயங்கிக் கொண்டிருக்கின்றன. பிரபஞ்சத்தையும் அதிலுள்ள அனைத்துப் பொருட்களையும் தோற்றுவித்தது இயற்கையே. எனவே, அனைத்துப் பொருட்களின் தோற்றங்களுக்கும் மூலமாக இருப்பது இறைநிலையேயாகும். எனினும், உலகில் வாழும் எல்லா உயிரினங்களையும் கருத்தரித்தது முதல் வளர்த்து வழிகாட்டுவதில் பெண் இனத்திற்குத்தான் இறையாற்றல் தனது அருளை முழுமையாக வழங்கி இருக்கிறது.

உயிர்களைத் தோற்றுவிப்பதற்காக உள்ள ஆற்றலையும், பொறுப்பையும் பெண்ணினத்தினிடமே அமைத்துக் கொடுத்து இருக்கிறது. இதன் மூலமும் பெண்களின் மதிப்பை, பெண்ணினத்தின் தெய்விக மதிப்பை உணரலாம். 

உண்மையான துறவி: 

ஒரு பெண் திருமணமான பிறகு கணவர் வீட்டிற்கு வருகின்றபோது பெற்றோர்களைத் துறந்து, வீட்டைத் துறந்து, பிறந்த ஊரினைத் துறந்து, பெற்றோர்கள் வீட்டிலிருக்க எல்லாப் பொருட்களையும் துறந்து கணவன் வீட்டிற்கு வருகிறாள். இந்தத் துறவைவிட இதுவரை எந்த இடத்தில் யார்  மேற்கொண்ட துறவு அதிகமாக இருந்துவிட முடியும்? அத்தகைய துறவிகளையே எல்லாரும் மனைவிகளாகப் பெற்றிருக்கிறார்கள். கணவருடைய நலத்திற்காகவே அவர்களுடைய வாழ்நாளெல்லாம் ஒத்துழைக்கத் தயாராக வந்துவிட்டார்கள். அதை உணர்ந்து கொள்ள வேண்டியது ஆண்களுடைய கடமை.

சிறப்பானவர்கள்: 

அன்பு என்பது ஒன்றிணைத்துக் கொள்ளும் மனப்பான்மை அந்த மனப்பான்மையில் பெண்களுக்கு வேண்டியதைச் செய்ய வேண்டும். ஆண்களுக்குப் பெண்கள் அடிமையும் இல்லை. அதாவது குறைந்தவர்களும் இல்லை; அதேபோல ஆண்களுக்குப் பெண்கள் உயர்ந்தவர்களும் இல்லை, ஆண்களுக்குப் பெண்கள் சமமானவர்களும் இல்லை; இயற்கை அமைப்பில் பெண்கள் சிறப்பானவர்கள்; பிரத்யேகமான மதிப்பு உடையவர்கள் என்பதை உணர்ந்து மதித்து ஒவ்வொரு ஆணும் நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

பண்புகள்: 

பெண்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய பண்புகளோடு தியாகத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது மகரிஷி அவர்களின் வேண்டுகோள் கற்பு: கற்பு என்பது பெண்களுக்கே உரித்தானது என்று பலராலும் வழங்கப்பட்டு வருகிறது. உண்மையில் இது ஆண்களுக்கும் உரிதானதேயாகும்.                                           "சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர் 

                         நிறைகாக்குங் காப்பே தலை"              - திருக்குறள் 

 "காவல் தானே பாவையர்க்கு அழகு “ என்று ஒளவையார் கூறுகிறார். பெண்கள் தன்னைத்தானே காத்துக் கொள்வதுதான் காவல், கற்பைக் காத்துக் கொள்வதே நிறைகாக்கும் காப்பு ஆகும்.

ஆண்களும், பெண்களும் கூடிய கூட்டுச் சமுதாயமான உலகத்தில் பெண்ணின்றி ஆணில்லை. உலக மக்கள் அனைவரும் பெண்ணின் அன்பளிப்பே. பெண் வயிற்றில் உருவாகி, பெண் பாலுண்டு வளர்ந்து, பெண் துணையால் வாழ்கின்றோம். பெண்களைத் தையலர். நேரிழையீர் என்றெல்லாம் இலக்கியங்கள் உயர்வாகக் கூறுகின்றன. ஆனால் உண்மையில் பெண்ணினம் இரண்டாம் தர குடிமக்களாகவே விளங்குகின்றது. பெண்ணின் பெருமதிப்பை பெண்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆண்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். பெண்ணினத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் பெண்களுக்குக் கல்வியும் வேளை வாய்ப்பும், பிற சலுகைகளையும் அளிக்க வேண்டும்.

மனைவிநல வேட்பு விழா:

மனவளக்கலை மன்றங்களில் ஆகஸ்டு 30ஆம் தேதி "மனைவி நல வேட்பு நாள்" என்று கொண்டாடப்படுகிறது. கணவன் ஒரு கவியைச் சொல்லி மனைவிக்கு ஒரு பூச்செண்டைக் கொடுக்க, மனைவி, பதிலாக ஒரு பழத்தை அன்புடனே கணவனுக்கு அளிக்கிறாள். அப்பொழுது பெண்மையின் பெருமையை ஆண்கள் உணர்வதற்காகவும், மதித்து நடந்து கொள்வதற்காகவும் ஒரு கவியைக் கணவன் சொல்வதாகவும் இந்நிகழ்வு நடைபெறும். அக்கவி,

           "பெற்றோரைப் பிறந்தகத்தைப் பிறந்த ஊரை விட்டுப் 

            பிரிந்து வந்து பெருநோக்கில் கடமையறம் ஆற்றப்

            பற்றற்ற துறவியெனக் குடும்பத் தொண்டேற்றுப்

             பண்பாட்டின் அடிப்படையில் எனைப்பதியாய்க் கொண்டென்

              நற்றவத்தால் என் வாழ்க்கைத் துணையாகி பெண்மை 

              நலநோக்கில் அன்போடு கருணையிவை கொண்டு

             மற்றவர்க்கும் தொண்டாற்றும் மாண்புமிக்க எந்தன்

              மனைவியை நான் மதிக்கின்றேன் வாழ்த்தி மகிழ்கின்றேன்"

SKY YOGA Online

Vethathiri Maharishi's SKY Yoga is spread across 20 countries and has transformed over 6 million lives.
SKY is the perfect blend of Yoga, Kundalini Meditation, Intense and Practical Introspection practices that empower to lead a meaningful and fulfilled life.

PHONE: +91 7904402887 / 04253-292746