பஞ்ச பூத நவகிரக தவம் மற்றும் நன்மையும் - வேதாத்திரி மகரிஷி

கேள்வி:
"சுவாமிஜி, பஞ்சபூத நவக்கிரகத் தவங்களை யார் வேண்டுமானாலும் இயற்றலாம் என்று சொல்கிறீர்கள். அதுவும் துரியாதீதம் போன்றதுதானே? அதை எப்படி எல்லோரும் இயற்ற முடியும்?

மகரிஷியின் பதில்:
"துரியாதீதத் தவம் என்பது மனதை உயிரில் ஒடுக்கி பிறகு உயிரை பரத்தில் ஒடுக்க வேண்டும். இங்கு மனத்தின் அலை வேகம் குறைந்து இயற்கையினுடைய அலை வேகத்திற்கு (NATURAL FREQUENCY) இறைநிலையாகிய இருப்பு நிலைக்கு வந்து விடும்.

பஞ்சபூத நவக்கிரகத் தவம் என்பது நவக்கிரக வழிபாடு போன்றது. மனதை கோள்கள் மீது வைத்திருந்தால் போதும். மனம் அதில் ஈடுபடும்பொழுது அதனுடைய தன்மையில் உயிர்க்கலப்பு பெறும். அதனால் அதிலிருந்து வரும் தீமைகள் தவிர்க்கப்படும். நன்மைகள் அதிகமாகும்.

இது இயல்பூக்க நியதி என்ற முறையில் எதைப் பற்றி மனம் எண்ணிக் கொண்டிருக்கிறதோ அதற்குத் தகுந்தாற்போல் அதனுடைய தன்மையும் மனத்தினுடைய தன்மையாக மாற்றம் பெறும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
-தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

JOIN US




Launch your GraphyLaunch your Graphy
100K+ creators trust Graphy to teach online
SKY Yoga 2024 Privacy policy Terms of use Contact us Refund policy