There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
உலக சமாதான திட்டத்திற்கு மகரிஷி அவர்கள் மிகப்பெரிய திட்டத்தை வடிவமைத்திருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை எல்லா நாடுகளையும் உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு பெரிய சபை. அந்தப் பெரிய சபையை அவ்வளவு பணம் செலவு செய்து நடத்திக் கொண்டு வரும் பொழுது, நாட்டின் பாதுகாப்பை அதனிடம் ஒப்படைத்துவிட்டு ஒவ்வொருவரும் நிம்மதியாக இருக்கலாம் இல்லையா? எல்லா நாடுகளும் சேர்ந்து ஒவ்வொரு நாட்டினுடைய எல்லைப் பாதுகாப்புப் பொறுப்பை ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைத்து விட வேண்டும். இத்தீர்மானத்திற்கு பெரும்பெரும் நாடுகள் சிறிது தயக்கம் காட்டலாம். முதலில் எந்தெந்த நாடுகள் நாங்கள் ஆயுதத்தை முழுவதுமாக விட்டுவிட தயாராக இருக்கிறோம்! எங்களுடைய நாட்டின் எல்லையை மட்டும் பாதுகாக்கும் பொறுப்பை ஐக்கிய நாடுகள் சபை எடுத்துக் கொள்ளட்டும் என்ற அளவுக்கு என்ற அளவுக்கு ஒரு சலுகை கொடுக்கட்டும். இதற்கு எத்தனை நாடுகள் ஒப்புதல் அளிக்கிறது என்று பார்க்கலாம்!
இரண்டாவது உலக யுத்தத்திற்கு பின்னாலே ஆயுத உற்பத்தியைக் குறைத்துக் கொண்ட இரண்டே நாடுகள் ஒன்று ஜப்பான், மற்றது ஜெர்மனி. இந்த இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வியப்புக்குரிய அளவில் முன்னேறிவிட்டது. அதேபோல எந்த நாடு இராணுவத்துக்குப் போகவில்லையோ அந்த நாடு கட்டாயம் முன்னேறித்தான் வரும். அப்படி இந்தியாவும் செய்யலாம். இதேபோல் ஒரு திட்டம் வந்தால் எங்களுக்கு எந்த யுத்தமும் வேண்டாம், எல்லையை மட்டும் பாதுகாத்துக் கொடுங்கள், என்று முன்வருவார்கள்.
இதில் ஒரே ஒரு சிரமம் இருக்கிறது. இது அரசியல் தலைவர்கள் மூலமாக வரவேண்டுமானால் கஷ்டந்தான். ஆனால் இன்றைக்கு வரவர, Democracy என்ற குடியுரிமையிலே மக்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ? அதைத்தான் செய்ய வேண்டும் என்ற அளவுக்கு, கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் தலைவர்கள் திரும்பிப் பார்க்கிறார்கள். இந்த நேரத்தைப் பயன்படுத்தி உலக அமைதியில் அக்கறை கொண்ட நாம், உலக சாமாதானத்திற்குப் பாடுபடக்கூடிய தலைவர்களைத்தான் நாங்கள் தேர்ந்தெடுப்போம் என்ற அளவிலே அனைவருக்கும் ஊக்கம் வரவேண்டும்.
உதாரணமாக மனவளக்கலைஞர்களாகிய நாம் ஒரு நல்ல தீர்மானத்தை எடுத்துக் கொண்டால் அந்தத் தீர்மானத்தைத் தனியாக ஐக்கிய நாடுகள் சபையின் மெம்பர் நாடுதான் கொடுக்க வேண்டும். இந்திய நாட்டு அரசியல் தலைவாகள் சிறிது முயற்சி எடுத்தால் நமது நாட்டிலே உள்ள பார்லிமெண்ட் உறுப்பினர்கள் எல்லாம் இதை வற்புறுத்தி, விவாதித்து இக்கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பலாம். அவர்களும் அதை விவாதிப்பார்கள். அவர்களுக்கு அத்தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கும் அதிகாரம் உண்டு. ஏனென்றால் ஐந்து நாடுகளுக்கு, ரத்து அதிகாரம் (Veto Power) இருக்கிறது. அதிலே எந்த நாடு வேண்டுமானாலும் இதைத் தட்டிவிட்டு விடலாம்.
ஆனாலும் உலகம் முழுவதும் இத்தீர்மானத்தை விவாதம் செய்யும் பொழுது உலக மக்கள் எல்லோருக்கும் தெரிந்து விடும். இப்படி ஒரு திட்டம் வந்தது. அதைத் தட்டிவிட்டு விட்டார்கள் என்ற பேச்சு எழும். அந்த அளவுக்கு உலகுக்கு விழிப்பை ஏற்படுத்தக்கூடியது இந்த உலக சமாதானத் தீர்மானம். அதற்கு முன்னால் இன்னொரு விஷயத்தை ஆராய வேண்டும். இந்திய பார்லிமெண்ட்க்கு அனுப்புவதற்கு முன்னால் இங்கே தமிழ்நாடு அசெம்பிளியிலே வைத்து இங்கே உள்ள அரசியல் தலைவர்கள் எல்லோரும் தீர்மானம் செய்து இதை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் இந்திய பார்லிமெண்ட்க்கு அனுப்பலாமே!. அன்பர்களே! தங்களுக்கு எவ்வளவுக்கெவ்வளவு அரசியல் செல்வாக்கு இருக்கிறதோ அதையெல்லாம் வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டுச் சட்டசபையிலே வைத்து இதை முதலில் விவாதிக்கச் சொல்லலாம். அப்போது ஒரு புதிய விடியல் பிறக்கும்.
இன்றைய உலகம் வேக வாகன வசதிகளாலும், செய்தி போக்குவரத்தாலும், மீடியாக்களின் உதவியாலும் ஒன்றுபட்டுவிட்டது. ஒவ்வொரு நாட்டு மக்களும் எல்லா நாட்டிலும் கூடி வாழ்கிறார்கள். எல்லா நாட்டு மக்களும் ஒவ்வொரு நாட்டிலும் கலந்து வாழ்கிறார்கள். இனிமேல் பொருளாதாரத்தாலோ, அரசியலாலோ, மதத்தாலோ மனிதனை வேறுபடுத்திப் பார்க்க முடியாது. அதனால் உலகம் அமைதி அடைய உரிய முறை யோக சாதனை முறை. அற உணர்வு அமைதியாக, இயல்பாக மலரவேண்டும். மக்களிடத்திலே போரின் கொடூர தாண்டவங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி போர் தேவையில்லை என்று அன்புநெறி மலரச் செய்ய வேண்டும். அதற்கு தனிமனித அமைதி மூலம் குடும்பம், ஊர், சமூகம், உலகம் என விரிந்து அனைவரையும் உலகையும் வாழ்த்தி உலக சமாதானத்திற்காக உழைப்போம் யோகாவின் மூலம்!
PHONE: 7904402887 / 04253-292746