There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
இயற்கைப் பேராற்றல் அன்பு மயமானது. ஆகையினால்தான் இயற்கையின் உச்சகட்ட நிகழ்ச்சியாகிய மனிதனிடமும் அன்பு இருக்கிறது. நாம் ஒருவரை ஒருவர் நேரிலோ, தொலைபேசியிலோ உரையாடத் துவங்கும் முன் நன்றாக இருக்கிறீர்களா? என்று அன்போடு கேட்கிறோம். நாம் நன்றாக வாழ விரும்புவதும், பிறர் நன்றாக வாழ உதவுவதும் மனித இயல்பாக அமைந்திருக்கிறது. தான், தனது என்னும் உணர்வு மேலிடும் போதுதான் பிறர் மீது அன்பு செலுத்த இயலுவதில்லை.
நம்முடைய செயலாலும், நம் முன்னோர்களின் செயலாலும், சமுதாய வினையாலும், இயற்கை நிகழ்ச்சிகளாலும் உடலியக்கத்தில் குழப்பங்கள் ஏற்படுவது இயற்கை நியதி. உடல் துன்பத்தை தாங்கிக் கொள்ளும் சக்தி ஒவ்வொரு மனிதனுக்கு இயல்பாக இருக்கிறது. வந்த நோயை போக்கிக் கொள்வதற்கான வசதிகளும் அறிவும் மனித குலத்திற்கு அமைந்திருக்கின்றது. செயல்களை ஆற்றுவதும், அதற்கான விளைவை அனுபவிப்பதும், விளைவு துன்பமாக இருந்தால் மாற்றுச் செயல்களை ஆற்றி, துன்பத்தைப் போக்கிக் கொள்வதும் இனி திருந்திய செயல்களை ஆற்றுவதுமே மனித வாழ்வாகும்.
நன்றாக வாழ்வது என்பது துன்பமில்லாமல் வாழ்வதாகும். பசி, தாகம், தட்ப வெப்ப வேறுபாடு, உடல் கழிவுப் பொருள் உந்துவேகம் இவற்றால் உடலுக்கு துன்பம் ஏற்படுவது இயற்கை துன்பம். உடலில் வலி, நோய் என்பது செயற்கை துன்பம். உடல் துன்பங்கள் சிறியதாகவோ, பெரியதாகவோ, குறுகிய காலமோ, நீண்ட காலமோ இருக்கலாம். தக்க மருத்துவ சிகிச்சை மூலம் நோயைக் குணப்படுத்தலாம். குணப்படுத்த இயலாத கடுமையான நோய்கள் உடலுக்கு மரணம் ஏற்படும் போது தான் நீங்கும். இதனால்தான் ஞானிகளுக்கும் நோயின் தாக்கம் ஏற்பட்டிருக்கிறது. மனத்துன்பங்களை நொடிப் பொழுதில் போக்கி, உடல் துன்பங்களை குறைத்து, நீக்கி நோயில்லாமல் வாழலாம். அதற்கான வாழ்க்கை முறையே யோகா என்று சொல்லப்படுகிறது. உலகில் பல ஞானிகள் யோக நெறிகளை வகுத்துத் தந்திருக்கிறார்கள். தற்கால விஞ்ஞான அறிவுக்கும், அவசர வாழ்க்கைக்கு பொருத்தமான யோகாவாக போற்றப்படுவதுதான் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் வகுத்து வழங்கியுள்ள மனவளக்கலை யோகா ஆகும்.
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
Temple of Consciousness, Aliyar
Mobile Number: +91 79044 02887
Email: connect@vethathiri.ac.in