சக்தி தரும் மனவளக்கலை

நோய் எதிர்ப்புசக்தி நுணுக்கங்கள்

சக்தி தரும் மனவளக்கலை

பயிற்சி உலகளாவிய பயிற்சியாளர்கள் 
கால வரையறை  30 நாட்கள்
மொழி தமிழ்
வகை ஆன்லைன்
தளம் 
சுயமாக கற்றல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வதும், முழுமையான உடல், மன நலத்தைப் பெறுவதற்கான செயல்களில் ஈடுபடுவதும் தற்காலத்தில் மிக முக்கியமான தேவைகளாக உள்ளன.

எளிய, விஞ்ஞான முறைகளால் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மிகவும் விரைவாகவும், எளிதாகவும் அதிகரித்துக் கொள்ளும் வழிமுறைகளை அறிந்து கொள்ளுங்கள்.

நமது உடலானது மிகவும் அற்புதமான ஒரு படைப்பு

நம்மை நோய்கள் வராமல் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், நோய்கள் வந்தாலும் கூட அவற்றிலிருந்து நம்மை விரைவாக மீண்டுவரச் செய்யும் ஆற்றல் பெற்றிருக்கிறது.

உடலுக்குள் ஊடுருவிப் பக்க விளைவுகளை ஏற்படுத்தாத, ரசாயனங்களற்ற சிகிச்சை முறைகளையும், இயற்கையான முறைகளையும் ஏற்றுக் கையாண்டால், நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நம் மனதை உள்முகமாகத் திருப்பி, ஜீவகாந்த சக்தியைத் திணிவுபெறச் செய்வது, நமது ஆற்றலையும், திறனையும் அதிகரிக்கச் செய்யும்.

நீண்டகாலம் ஆரோக்கியமாக , நலமாக வாழ்வது என்பது நம் கைகளில்தான் உள்ளது என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?

உங்களுக்குள் உள்ள இந்த ஆற்றலைக் கண்டறிந்து அதை உங்கள் அன்றாட வாழ்க்கை நலனுக்காகப் பயன்படுத்த விரும்புகிறீர்களா?

உலகம் முழுவதுமுள்ள மருத்துவர்களும், மருத்துவம் சார்ந்த துறையில் உள்ளவர்களும், பல்லாயிரக்கணக்கான மக்களும் இயற்கை நமக்கு வழங்கியுள்ள அற்புதமான இந்த நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பற்றிப் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்வது, முழுமையான நலவாழ்வு வாழ்வது பற்றி- உலகம் முழுவதிலும் உள்ள பல்துறை வித்தகர்களிடம் இருந்தும், மருத்துவ வல்லுநர்களிடம் இருந்தும், அனுபவம் மிகுந்த ஆசிரியர்களிடம் இருந்தும், பேச்சாளர்களிடம் இருந்தும் அறிந்து கொள்ளுங்கள்.

வான்காந்த ஆற்றலை ஈர்க்கும் ஆன்டெனாக்களாக மாறி , மன அமைதியை அதிகரித்துக் கொண்டு, பிரபஞ்சம் வரை விரியுங்கள்.

பயிற்சி மட்டும் செய்முறை

14-பாயன்ட் அக்குபிரஷர் டெக்னிக்குகள்

 • ஒவ்வொரு நாளும் உற்சாகம்
 • நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து உடல் பராமரிப்பு
 • முழு உடலிலும் நச்சு முறித்தல்

பயிற்சி மட்டும் செய்முறை

பிராணாயாமம் மூலம் ஒவ்வொரு மூச்சிலும் இயற்கையுடன் இணைந்திருப்பதை அனுபவியுங்கள்.

 • நமது உடலுக்கு அத்தியாவசியத் தேவையான நைட்ரிக் ஆக்ஸைட் என்ற ரசாயனத்தை அதிகரிக்க சுவாசம் உதவுகிறது.
 • பிராணன் என்ற உயிர்ச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
 • உடலிலுள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது.

பயிற்சி மட்டும் செய்முறை

நல்ல ஆழ்ந்த உறக்கத்துக்கான பயிற்சிகள்

 • உறக்கத்திற்க்கான அத்தியாவசிய ஆற்றல் 
 • உறக்க சுழற்சியினை சீராக்கும் சர்க்கேடியன் இசைவு
 • உறக்கமும் விழிப்பும் சீராக அமைக்கும் நெறி

பயிற்சி 

நன்கு சுறுசுறுப்பாகச் செயல்படுவதற்கான பயிற்சிமுறைகள்

 • மனதை உங்களுடைய நண்பனாக்கிக் கொள்ளுங்கள் 
 • சிக்கலான பிரச்சினைகளுக்கு எளிமையான தீர்வுகள் 
 • முழுமையான வாழ்க்கைக்கு இயற்க்கையோடு இணைந்து வாழ்தல் 

பயிற்சி

உணர்ச்சிவயப்பட்ட மனோ நிலைகளில் இருந்து விலகி, வாழ்க்கைப் பிரச்சனைகளை நல்ல முறையில் கையாளுவதற்கான வழிமுறைகள்

 • நல்ல நேர்மறையான வார்த்தைகளை அறிவோம்
 • மந்திரம் – அட்சரம் – அலைகள்
 • நம்மை வாழ்த்தி கொள்வது சிறந்த தந்திரம்

பயிற்சி 

இசை சிகிச்சையின் மூலம் அற்புதமான மெல்லிசையை அனுபவித்துக் கொண்டே உடல்நலம் காக்கும் வழிமுறைகள்

 • மூளைசெல்கள் புதுப்பிக்கப் படுகின்றன
 • முயற்சியின்றியே மனம் அமைதியாகவும், தளர்வாகவும், தன்னைத் தூய்மைப் படுத்திக் கொள்ளவும் முடிகிறது.
 • ஆழ்ந்த தியானத்தில் இசையின் நுணுக்கமான அதிர்வுகள் உங்கள் உள்ளே பாய அனுமதியுங்கள்.