மத்திய ஆயுஷ் அமைச்சகம் 2022 ஆம் ஆண்டிற்கான சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுவதற்காக 'மனிதகுலத்திற்கான யோகா' என்று வடிவமைத்துள்ளது . சர்வதேச யோகா தினத்தின் எட்டாம் ஆண்டு வரும் ஜூன் 21 2022 அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யோகா, கோவிட்-19 பெருந்தோற்றின் போது ஏற்பட்ட துன்பங்களில் இருந்து மனிதகுலம் எவ்வாறு வெளிவர உதவியது என்பதை சித்தரிக்கும் வகையில் இந்த ஆண்டிற்கான கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்துள்ளது. யோகா என்பது உடல், மனம் மற்றும் ஆன்மாவின் பற்றிய அறிதலின் மிக தொன்மையான ஓர் கலையாகும்.

யோகா என்பது பண்டைய இந்திய பாரம்பரியத்திலிருந்து மனிதகுலத்திற்கு கிடைத்த ஒரு விலைமதிப்பற்ற பொக்கிஷமாகும் . SKY யோகா உட்பட அனைத்து வகையான யோகாவும் மனித மனம், உடல், எண்ணங்கள் மற்றும் செயல்களை முறைபடுத்தவும், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே ஓர் ஒத்திசைவோடு வாழவும் கற்றுக்கொடுக்கிறது. எனவே, இது நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான முழுமையான அணுகுமுறையாகக் கருதப்படுகிறது. SKY யோகாவை 60 ஆண்டுகளாக உலகம் முழுவதும் 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கற்று வருகின்றனர்..

SKY யோகா பயிற்சிகளை சாதாரண உடற்பயிற்சி என்று தவறாகக் கருதி விடக்கூடாது. அவை நம்மை இயற்கை மற்றும் சமுதாயத்தோடு இணைக்க கூடிய ஒரு செயல் முறையாகும்.

IYD- 2022 WCSC WHATSAPP GROUP

About WCSC & SKY YOGA

உலக சமுதாய சேவா சங்கத்தின் உயிர்நாடி அதன் நிறுவனரான வேதாத்திரி மகரிஷி அவர்களின் உயர்ந்த கோட்பாடுகள். மகரிஷி அவர்கள் தன்னுடைய பல ஆண்டு கால‌ ஆராய்ச்சியின் மூலம் எளிய முறை குண்டலினி யோகப் பயிற்சிகளை வடிவமைத்துள்ளார்.

உலக சமுதாய சேவா சங்கத்தின் உயர்ந்த நோக்கம் அதன் தலைவர் திரு எஸ் கே எம் மைலானந்தம் ஐயா அவர்களின் மிகச் சிறந்த தலைமையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

23 நாடுகளில் 23000 மையங்கள் மூலம் SKY யோகா தன் சிறகுகளை உலகெங்கிலும் விரித்து மக்களின் மனங்களில் அமைதியை ஏற்படுத்தி அதன் மூலம் உலக அமைதி ஏற்பட மிகச்சிறந்த முயற்சிகளை செய்து வருகிறது.

விரைவில் வருகிறது

அனைத்து SKY மன்றங்களுக்கும் போஸ்டர் மற்றும்
காணொளி காட்சிகள் பட்டனை தட்டினால் கிடைக்கும் வகையில்  அமைக்கபடும்.

உலகத் தரத்தில் விவரங்கள்.

மேலும் படிக்க

SKY யோகா - உடல்நலம், மன மகிழ்ச்சி மற்றும் அமைதிக்கான மிக எளிய செயல்முறை.

SKY இப்போது உங்கள் விரல் நுனியில் கிடைக்கிறது.

MOBILE APP